Mounasaadhu Trust

Mounasaadhu Trust

0 0 Nonprofit Organization

+91 98426 79674 info@mounasaadhu.com mounasaadhu.com

Chinna Nerkunam Post,near Kooteripattu,tindivanam Taluk Villupuram, Tindivanam, India - 604 302

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
0

0 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Mounasaadhu Trust in Chinna Nerkunam Post,near Kooteripattu,tindivanam Taluk Villupuram, Tindivanam

மெளன சாது பால ஞான சுவாமிகள் வரலாறு

உலக கடவுளின் தூதர் அருள்மிகு மெளன சாது பாலாஞான சுவாமிகள் 1934 ஆம் ஆண்டு திருவெண்ணெய்நல்லூர் அருகிளுள்ள மழையம்பட்டு என்ற கிராமத்தில் மொட்டையர் உடையார் மற்றும் குள்ளம்மாள் தம்பதியருக்கு ஒன்பதாவது மகனாகப்பிறந்தார்.

இவரது இயற்பெயர் மதிவாணன். ஐயா அவர்களளின் கல்வி திருவெண்ணெய்நல்லூரில் தொடங்கி மதுரை மாநகரில் மருத்துவ படிப்பு ( எம் .பி .பி.எஸ் ) முடித்து லண்டனில் FRCS பட்டம் பெற்றார். பின் ஆங்கில மருத்துவராக (அலோபதி ) ஆலடி கிராமம்மோழியனுர், நாலாம் பிள்ளை பெற்றாள். கணக்கன் குப்பன், பெரியதச்சூர் , சின்ன செவலை , கூனிமெடு கூனிமேடு, பிரம்மதேசம் மற்றும் கடபாக்கம் முதலிய ஊர்களில் மருத்துவராக பணியாற்றினார்.

இவருக்கு முன்பிறந்த அத்தனை குழந்தைகளும் ஒவ் ஓன்றாக இறந்துவிட்ட காரணத்தால் ஐயாவின் பெற்றோர் ஊராரின் அறிவுறுத்தலின்படி ஐயாவை மண்ணில் போட்டு இவரை தன் பிள்ளையில்லை ஊரார்பிள்ளை என்று முடிவு செய்து வளர்த்து வந்தார்கள். பிறந்த அன்றே உலகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மகான்.

ஐயா அவர்கள், 2003 ஆம் ஆண்டு வருடம் சனவரித் திங்கள் 9 ஆம் நாள், மார்கழி மாதம் 25 ஆம் நாள் , உத்திரட்டாதி நச்சத்திரத்தில் சமாதியடைந்தார் (மனுவாகிய சப்தமி திதி ,ஒவ்வொருவரும் அடைய வேண்டிய நிலை)

சுவாமிகளின் தந்தை பெயர் : மொட்டையர் உடையார்
சுவாமிகளின் தாயார் பெயர் : குள்ளம்மாள்
சுவாமிகளின் இயற்பெயர் : மதிவாணன்
சுவாமிகளின் மனைவி பெயர் : மௌ.வசந்தி
சுவாமிகளின் பிள்ளைகள் பெயர்: மௌ.மணிகண்டன், மௌ.சத்தியசொரூபன்

இல்லற வாழ்க்கை :

ஐயா வசந்தி என்ற பெண்ணை திருமணம் முடித்தார். இவர்களுக்கு மணிகண்டன் மற்றும் சத்தியசொரரூபன் எனும் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன.

துறவு:

ஐயா அவர்கள் இளமைக் காலம் முதலே ஆன்மீக ஈடுபாடு அதிகமுள்ளவராக வாழ்ந்தது வந்தார்.ஒருநாள் நெய்வேலியை அடுத்துள்ள வீரசிங்ககுப்பத்திலுள்ள தங்கும் விநாயகர் ஆலயத்தில் 27-8-87 அன்று உற்றார் உறவினர்ககளை அழைத்து தான் இன்று முதல் சந்நியாசி என்றும் தான் ஒரு நடை பிணம்அறிவித்து துறவு மேற்கொண்டார். ஐயா துறவு முன் அவர் பெற்ற மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் தீயில் எரித்து விட்டார் .

ஞான வாழ்க்கை:

ஐயா தேங்காய் வாழைப்பழம் களிமண் இவைகளை மட்டுமே ஆகாரமாக உண்டு , ஆடையாக சாக்கு கோவணம் மட்டுமே அணிந்து 15 வருடம் மௌனம் கடைபிடித்து ஞான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆங்கில மருத்துவராக பணியாற்றிய இவர் துரவுக்குப்பின் இயற்கை மருத்துவமே உயிர்காக்கும் உண்மை மருத்துவம் . என்று மக்களுக்கு நிரூபித்து அனைத்து நோய்களைவும் இயற்கை மருத்துவம் மூலமாகவே குணப்படித்தினர்.இன்றும் அவர்கள் காட்டிய வழியில் அவரது இளைய புதல்வன் சத்தியசொரூபன் மருத்தவம் செய்துவருகிறார்.

நிகழ்வுகளில் சில:

ஐயா அவர்கள் ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தே, காவலாளி ஒருவர் செருப்பு காலோடு, ஆசிரமத்துக்கு உள்ளே நுழைந்தார், ஐயா அவரை செருப்பை வெளியே கழுற்றும்படி பணிந்தார், காவலாளில் அதனை செவிமடுக்காமல் உள்ளே வந்தார். ஆனால் திரும்பி சென்ற பின்பு, தகவல் கிடைத்தது, அந்த காவலாளி 2 கி. மீட்டார் தூரத்தில் விபத்தில் இறந்து விட்டார் என்ற தகவல் ஆசிரமத்திற்கு வந்தது. இதைக் கேட்ட ஐயா அவர்கள் மிகவும் மனம் வருந்தினர்.

ஐய வாழ்ந்து வந்த காலத்தில் திருச்சி அருகே ஒரு சாமியார் ஆசிரமத்தில் நடந்த ஓர் சொல்லதகாத செயலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆதலால் அப்போதிருந்த அரசாங்கம் தமிழகத்தில் உள்ள எல்லா சாமியார் ஆசிரமங்களையும் ரகசிய விசாரணை செய்ய ஆணை பிறப்பித்தது. ஐயா அவர்கள் ஆசிரமத்தையும் பரிசோதனை செய்ய ரகசிய ஆணை செய்ய பட்டிருந்தது. ஆசிரமத்திற்கு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்த்து ஐயாவின் ஆசிரமத்தில் எல்லாச் செயல்களும் நேர்மையாக மக்களுக்கு உபயோகமாக இருப்பது தெரிந்த சோதனை செய்ய மறுத்து மேல் அதிகாரிகளுக்கு பதில் அளித்து விட்டனர். ( இவையாயும் பின்னாளில் தெரிய வந்த விஷயங்கள்).

உயரதிகாரிகள் வேறு காவல் நிலைய காவலரை சிறப்பாக பணியமர்த்தி ஐயாவின் செயல்களை விசாரித்து அறிக்கை தரும்படி பணி அமர்த்தினார்கள்.

விசாரணைக்கு வந்த புலன் அதிகாரி தன்னை சாதாரண மனிதனாக ஐயாவிடம் அறிமுகப்படுத்தி ஆசிரமத்தில் தன்னை சில நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஐயா அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் அம்மனிதரின் வெண்டு கோளை ஏற்றுக்கொண்டார். சிறிது நாட்கள் ஆசிரமத்தில் தங்கி புலன் விசாரணை செய்ய அதிகாரி தான் வந்த வேலை முடிந்து விட்டதாக சொல்லி ஐயாவிடம் விடை பெற்றபோது ஐயா அவரிடம் சொல்லியது நீங்கள் வந்த கடமையை சிறப்பாக செய்தீர்கள் என்று பாராட்டினார். உடனே அந்த புலன் விசாரணை அதிகாரி ஐயா காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினார். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் ஐயா அவர்கள் நடந்துக் கொண்டது கண்டு அந்த அதிகாரி மை சிலித்தார்.

சமாதி அடைதல்

ஐயா அவர்கள் 9- 1-2003க்கு சில மாதங்களுக்கு முன்பு தான் 9-1-2003 அன்று ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று தன சிடர்களுக்கு சொல்லியிருந்தார். 8-12-2003 அன்று ஆசிரமத்து மாடியில் உள்ள ஐயாவின் தவ அறையில் சமாதி அடைந்தார். இதைக்கண்ட ஆசிரமத்து மக்கள் பயந்து பொய் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் .மாடியில் ஐயா தவத்திலிருந்த இடம் அனலாக கொதிப்பதை உணர்ந்தனர். ஐயா நாடித் துடிப்பு சீராக இருந்தது. ஐயா மருத்துவமனையில் எழுந்து உட்க்கார்ந்து, தனக்கு அலோபதி மருத்துவம் ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று கூறிவிட்டு மறுபடி தவநிலைக்கு சென்று விட்டார். மருத்துவமனைக்கு வந்த ஐயாவின் சீடர்கள் ஐயாவை ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார்கள்.

ஐயா அவர்கள் ஜீவசமாதி அடைவதற்கு பல நாட்களுக்கு முன்பு தன் சீடர்களில் ஒருவரிடம் அவர் அடுத்த முறை ஆசிரமத்திற்கு வரும்போது " மாம் பூ " எடுத்து வரும்படி கூறியிருந்தார். அதன்படியே தெரியாமல் எதேச்சையாக மாம் பூக்களை எடுத்து வந்திருந்தார். மாலை இந்த மாம்பூக்களை மேலே தூவி மண் மறவு செய்தனர். ஜீவசமாதி கட்டுமான பனி நடந்த இடத்தில், மது அருந்திய ஒருவர் வேலை செய்ய முற்பட்டார். அப்பொழுது, கடப் பாறையை கை தவறி காலில் போட்டுக்கொண்டு வழியில் துடித்தார். அவரை அந்த இடத்தில் இருந்து அப்புரப்படித்திய பிரக், கட்டுமானப் பனி தொடர முடிந்ததது. கட்டுமானப் பனி நடந்து கொண்டிருந்த தருவாயில் வெள்ளை உடை அணிந்து ஒருவர் (யாருக்கும் அறிமுகமில்லாதவர்) திடிரென்று அங்கே வந்து ஜீவசமாதியை முன்று உயரத்தில், 3 அகலத்தில் 6அடி நீலத்தில் செவ்வகமாக வடிவமைக்க வேண்டும் என்று கூரினார். அதன்படி கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த பொழுது அந்த மனிதரை கண்டுபிடிக்கவில்லை. (அங்கே வந்தவர் யார் கண்ணிலும் தென்படவில்லை மறைந்து விட்டார்.)

இன்றும் ஆசிரம பள்ளிக்கு படிக்க வந்த மாணவர்களுக்கு ஐயா காச்சி கொடுக்கிறார். ஆசிரமத்தில் ஐயா வளம் வருவதை, பல மாணவர்கள் கண்டிருகிரார்கள்.

ஐயா அவர்கள் பலருக்கு தியானத்தில் காசி அளித்திருக்கிறார். இன்றும் ஐயா அவர்கள் சமாதியில் யார் என்னே பிரார்த்தனை செய்தாலும் அது உடனே நிறைவேறுவதை அனுபவித்து உணருகிறார்கள். நிங்களும் வரலாமே!

Popular Business in tindivanam By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.