Puthiya Podhuvudamai Iyakkam - புதிய பொதுவுடமை இயக்கம்

Puthiya Podhuvudamai Iyakkam - புதிய பொதுவுடமை இயக்கம்

3016 4 Political Organization

+919094746003 drsajithattepuram@gmail.com www.socialism.in

No 9, Damodaran street, Kellys, Kilpauk,, Chennai, India - 600010

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
4

4 Reviews

5
0%
4
75%
3
0%
2
25%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About Puthiya Podhuvudamai Iyakkam - புதிய பொதுவுடமை இயக்கம் in No 9, Damodaran street, Kellys, Kilpauk,, Chennai

பெருவரியானவர்களை சுரண்டும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கான மாற்றாக மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக பொதுவுடமை கோட்பாடுகளை முன்னெடுக்கும் ஓர் போராட்ட இயக்கம்!

Puthiya Podhuvudamai Iyakkam is the Tamilnadu section of New Socialist Alternative (CWI-India),as the name goes we are a Socialist Political Organisation striving to build Democratic Socialist World. We welcome workers & youth to join us to build a socialist alternative to capitalism. www.socialism.in
FB Page: https://www.facebook.com/Socialism.in/?fref=ts


பொதுவுடமை' என்பது நம்மில் பலரும் அறிந்த ஓர் அரசியல் சார்ந்த சொல்லாகவும் மற்றும் பல்வேறு கோணங்களில் புரிந்து கொண்ட ஓர் அரசியல் தத்துவார்த்தமாகவும் இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் விட இன்றைய நிலையில் முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஓர் வாக்கியமாகவும் 'பொதுவுடமை' உள்ளது.

'பொது' என்று அசால்டாக கூறி சில வேளைகளில் தனது உரிமையை நிலைநாட்ட தெரிந்தவர்கள் உள்ள இச்சமூகத்தில்தான் முதலாளித்துவமும் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எச்சமும் பெரும் சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது!

எனவே தான் இந்த வறுமையை வெகு மக்களின் மேல் சுமத்தும் தற்போதுள்ள சுரண்டல் அரசியலை எதிர்க்க மற்றும் அந்த அரசியலை எவ்வித குறுகிய சந்தர்பவாதங்களுக்கும் உட்படுத்தாமல் மக்களிடமும் மற்றும் ஏனைய போராளிகளிடமும் கொண்டு போய் சேர்க்க அவர்களிடம் பரவலாக அறியப்பட்ட 'பொது' என்கிற 'பொதுவுடமை' உதவும் என்று கருதுகிறோம்.

இது நாள் வரை 'பொதுவுடமை கட்சிகள்' என்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவும் பல தருணத்தில் பின்பற்றிய சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் மக்கள் விரோத கட்சிகளுடனான கூட்டணிகள்,
ஆளும்வர்க்கத்துடன் சமரச அரசியல் போன்ற பல காரணங்களால் இடதுசாரி மற்றும் பொதுவுடமை அரசியல் மக்களிடையே ஏற்றம் பெறவில்லை.
மாற்றுமல்லாது 'அதிகார வர்க்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசியமயமாக்கல்' - என்ற வறட்டு புரிதலை பொதுவுடமை கருத்தியலுக்கு கார்பொரேட் ஊடகங்கள் கற்பித்துள்ளது.

என்றாலும் இந்த வரலாற்றுச் சுமையை பொருட்படுத்த தேவையில்லை. மட்டுமல்லாது தற்போழுது உள்ள தலைமுறை போராளிகள் ஆவணங்களை கையிலேந்தி புத்திஜீவி அரசியல் விவாதங்களில் கிளர்ச்சியுற தயாராக இல்லை!

வறுமை, பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி, ஜாதிய கொடுமைகள், விவசாயிகள் தற்கொலை, மற்றும் பல சீர்கேடுகள் தற்பொழுதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையை சோதனைக்கு உட்படுத்துகிறது. விழிப்புணர்வுள்ள எவரும் எதிர் பார்ப்பது ஓர் மாற்று அரசியலே! மற்றும் தற்பொழுதுள்ள உலகம் தழுவிய பொருளாதாரச் சீர்குலைவு அதன் விளைவாக எழுந்துள்ள அரசியல் சூறாவளிகள் முதலாளித்துவம் மற்றும் தனியார்மய கோட்பாடுகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர், உலகம் தெரிய கழுதையின் மேல் ஏற்றியுள்ளது!

இதனால் எல்லாம் சமீப காலங்களில் மக்களிடையே அதுவும் இளந்தலைமுறையினர்களிடம் மாற்று அரசியல் சிந்தனை அதுவும் பொதுவுடமை சித்தாந்தங்களின் மீது ஆர்வம் ஒருவிதத்தில் அதிகரித்து உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே ஒட்டுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்ட அரசியலை கொண்டுபோய் சேர்ப்பதே நம் முன் இருக்கும் பெரும் சவால். இதற்கான இயக்க பணிகளை 'புதிய பொதுவுடமை' செய்து கொண்டுவருகிறது.

Popular Business in chennai By 5ndspot

© 2024 5ndspot. All rights reserved.